உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மூன்றாம் நாளான இன்று பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.