திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட தொண்டமானூர் மற்றும் அகரம்பள்ளிப்பட்டு கிராமங்களில் ஃபென்சல் புயலால் பெய்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை நேரடியாக ஆய்வு செய்து, கனமழையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் திருவண்ணாமலை வ.உ.சி நகர் 11-வது தெருவில் நிலச்சரிவில் உயிரிழந்த ஏழு பேரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஏழு குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கினார். மேலும் 500 நபர்களுக்கு மளிகைபொருள் அடங்கிய தொகுப்பு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், போளூர் சட்டமன்ற உறுப்பினர், தெற்கு மாவட்ட கழக செயலாளர், அக்ரிஎஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றும் திருவண்ணாமலை கிழக்கு, மத்தியம், வடக்கு மாவட்ட கழக செயலாளர்கள், S. ராமச்சந்திரன் உட்பட அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.