கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி அமைச்சர் கணேசன் வழங்கினார்.அதைத் தொடர்ந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் கணேசன் திறந்து வைத்து மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார்.
இதில் மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர், ஒன்றிய செயலாளர் பட்டு அமிர்தலிங்கம், நகர செயலாளர் வி பிபி பரப்பகுரு, நகர் மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம், அயலக அணி மாவட்ட அமைப்பாளர் சேதுராமன், மாவட்ட பிரதிநிதி விக்கி, ஆசிரியர்கள், கவுன்சிலர்கள் கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.