கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் கிழுமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அம்சவள்ளி இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது.இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று காலை கணவன் மற்றும் மனைவி இடையே சண்டை ஏற்பட்டதால் மனமுடைந்த அம்சவள்ளி வீட்டின் மொட்டை மாடியில் மண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட நிலையில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ராமநத்தம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.