கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் சாத்தியம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி புவனேஸ்வரி (வயது 23) மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது இடி மின்னல் தாக்கி பலியானார்.
அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.வெ. கணேசன் வழிகாட்டுதலோடு இன்று அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மற்றும் நல்லூர் வடக்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் பாவாடை கோவிந்தசாமி நேரில் சென்று நிதி உதவி வழங்கினார்.