ஃபெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடலூர் -பாண்டி சாலையில் இடையார்பாளையம் பகுதியில் உள்ள பாலம் உள்வாங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் பாலம் சீரமைக்கும் பணி நிறைவடைந்ததால் அப்பகுதியில் இன்று (டிசம்பர் 7) முதல் வழக்கம்போல் போக்குவரத்து துவங்கப்பட்டது.