ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மச்சிலிப்பட்டினத்தில் பிரதான பகுதியில் உள்ள நகைக்கடையில் நகை திருட்டு நடந்தது. கடைக்குள் மாலை நேரத்தில் ஒரு நபர் கடைக்குள் நுழைந்தான். கடை உரிமையாளரிடம் மோதிரங்கள் காட்டுமாறு கேட்டதும் அவரும் மோதிரங்களைக் காட்டினார்.அப்படியே அவரோடு பேசிக்கொண்டே இருந்த அந்த நபர் உரிமையாளர் கண்மூடி திறப்பதற்குள் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்புள்ள 28 கிராம் தங்கச் சங்கிலியை ஒரு பைக்குள் வைத்துக்கொண்டான். பின்னர் மோதிர மாடல்கள் பிடிக்கவில்லை என்று கூறி கடையை விட்டு வெளியேறினான். அவன் வெளியேறிய சில நிமிடங்களில் கடை உரிமையாளர் நகைகளை கணக்கு பார்த்தபோது ஒரு சங்கிலி காணவில்லை என்பதை உணர்ந்தார். உடனே அவர் கடையிலிருந்து வெளியே வந்து பார்த்த போது நகையை திருடிய நபர் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. அங்கிருந்த சி சி கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில் அந்த நபர் சங்கிலியை திருடி பைக்குள் போட்டுக்கொண்டது அம்பலமானது. நகைக்கடை உரிமையாளர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.