கள்ளக்குறிச்சியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், நகரமன்ற தலைவர்கள் சுப்பராயலு, முருகன், தியாகதுருகம் ஒன்றிய சேர்மன் தாமோதரன், நகராட்சி கமிஷனர்கள் கள்ளக்குறிச்சி சரவணன் திருக்கோவிலூர் திவ்யா, உளுந்தூர்பேட்டை இளவரசன், ஆதிதிராவிடர் நல அலுவலர் தாமரைமணாளன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், வருவாய், மகளிர் திட்டம், கூட்டுறவு உட்பட 14 துறைகள் சார்பில் 2,002 பயனாளிகளுக்கு 7 கோடியே 27 லட்சத்து 60 ஆயிரத்து 191 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.