திருக்கோவிலுார் தாலுகாவில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண் இயக்குனர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
திருக்கோவிலுார் தாலுகாவில் 17 ஆயிரத்து 891 எக்டர் பரப்பளவில் நெல், மக்காச்சோளம், உளுந்து, வேர்க்கடலை மற்றும் கரும்பு பயிரிடப்பட்டுள்ளன. இந்த பாதிப்புகளை கணக்கெடுக்கும் வகையில் வேளாண் இயக்குனர் முருகேஷ் கள ஆய்வு செய்தார். திருக்கோவிலுார் தாலுகா, கூவனுார், மிளாரிப்பட்டு கிராமங்களில் 482 எக்டர் பரப்பளவிலான பயிர்களை பார்வையிட்ட அவர், பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கள ஆய்வு செய்து கணக்கிட வேண்டும்.
பாதிப்பு இல்லாத பயிர்களுக்கு மழை நீர் வடிந்த உடன் உரிய பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றி பயிர்களை பாதுகாத்திட விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி, துணை இயக்குனர்கள் விஜயராகவன், அன்பழகன், உதவி இயக்குனர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.