கல்வராயன்மலையில் பெஞ்சல் புயலால் வீடுகள் சேதமடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டது.
கல்வராயன்மலையில் பெஞ்சல் புயலின்போது பெய்த கனமழை காரணமாக கல்வராயன்மலையில் உள்ள மேல்பாச்சேரி, கெடார், பட்டிவளவு, கொடமாத்தி, தொரடிபட்டு, கொட்டப்புத்தூர், ஆரம்பூண்டி, வாரம், சேராப்பட்டு உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில் 59 வீடுகள் இடிந்து சேதமானது.
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் 4,000 ரூபாய் வீதம் நிவாரண உதவித்தொகையை கல்வராயன்மலை தாசில்தார் கோவிந்தராஜ், துணை தாசில்தார் அந்தோணிராஜ் ஆகியோர் வழங்கினர்.