பெஞ்சல் புயலை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், சூளாங்குறிச்சியில் உள்ள மணிமுக்தா அணை, மொத்த கொள்ளளவான 736.96 மில்லியன் கன அடியில் 590 மில்லியன் கன அடிக்கு நிரம்பியது.
அணை பாதுகாப்பு கருதி, உபரி நீர் புதிய ஷட்டர்கள் வழியாக மணிமுக்தா ஆற்றில் திறந்து விடப்பட்டது.இந்நிலையில், நேற்று மதகு வழியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, பாசன மதகு வழியாக தண்ணீரை திறந்து வைத்தார். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மோகன், உதவி பொறியாளர் பிரபு, விவசாய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.