ஃபெஞ்சல் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் அடுத்த கண்டக்காடு பகுதி மக்களுக்கு பா. ம. க தலைவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் கடலூர் அடுத்த கண்டக்காடு கிராமத்தில் இன்று (டிசம்பர் 8) மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இதற்காக அப்பகுதியில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பாமக கடலூர் மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் நேற்று (டிசம்பர் 7) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.