
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மருத்துவமனை மற்றும் மங்களூர் வட்டாரத்திலுள்ள 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.1.1 கோடி மதிப்பீட்டில் 140 நவீன மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை ஹுண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை சார்பில் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டது. தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் இதனை தொடங்கிவைத்தார். உடன் மருத்துவர் மற்றும் பலர் இருந்தனர்.