திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் கோ பூஜை நடைபெற்றது.நிகழ்வுக்கு, அமைப்பின் மாவட்ட இணைச் செயலர் க. ஜெகநாதன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக தூசி நத்தக் கொல்லை சஞ்சீவி பீடாதிபதி சுவாமி கீதானந்த ஹனுமன் மாதாஜி பங்கேற்று அருளாசி வழங்கினார். தொடர்ந்து, பெண்களுக்கு மஞ்சள், குங்குமம்,மாங்கல்ய கயிறு ஆகியவற்றை வழங்கினார்.பூஜையில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை அமைப்பின் மாநில நிர்வாகி பாஸ்கரன், மாவட்டப் பொருளாளர் திருவேங்கடம், திருவோத்தூர் பாஸ்கர் ஆகியோர் செய்திருந்தனர்.