திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஸ்ரீபட்சீஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இந்தக் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, நேற்று மாலை கார்த்திகை மாத திருவிளக்கு பூஜை நடைபெற்றது.பூஜையில், சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். இதையடுத்து, ஸ்ரீபார்வதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் வி. ஜி. பாபு, காளத்தி, சங்கர பாண்டியன், துரைசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.