திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப., இன்று (07.12.2024) திருவண்ணாமலை, சுபலட்சுமி திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை மாநகராட்சி சார்பாக நடைபெறும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், திருவண்ணாமலை மாநகராட்சியின் மேயர் நிர்மலா வேல்மாறன், நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.