திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் அல்லி நகர், பெரியார் நகர், சிம்லா நகர், ஜெயின் நகர் உள்ளிட்ட 18 வார்டுகள் உள்ளன. இங்கு, சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு 5-க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில், சென்னையை சேர்ந்த கிங்ஸ் இன்ஸ்டிடியூட் நீர் பகுப்பாய்வு வல்லுநர் குழுவைச் சேர்ந்த நடராஜன் தலைமையில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி, குடிநீர் இணைப்புப் பகுதி, குடிநீர் விநியோகம் உள்ளிட்டவை குறிதது ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கோமதி மற்றும் நீர் பகுப்பாய்வு வல்லுநர் குழுவை சேர்ந்தவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களுக்கு சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் வழங்குதல் என்பன உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில், பேரூராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.