
மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் வீட்டில் அனைத்து பொருள்களும் சேதமடைந்தன. இதில், பள்ளி மாணவ, மாணவிகளின் புத்தகங்கள் நனைந்தன. வெள்ளம் வடிந்த நிலையில் தற்போது வெயில் காய்வதால், நீரில் நனைந்த தங்கள் பிள்ளைகளின் பாடப் புத்தகங்கள் மற்றும் மளிகைப் பொருட்கள், துணிகள், எலக்ட்ரானிக் பொருட்கள் அனைத்தையும் வெளியே எடுத்து போட்டு காயவைத்து வருகின்றனர்