சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு – பழைய பாலப்பட்டு சாலை குண்டும் குழியுமாகி, போக்குவரத்துக்கு ஏதுவாகாத நிலையில் உள்ளது. கல்வராயன்மலை புதுபாலப்பட்டிலிருந்து, பழைய பாலப்பட்டு, கள்ளிப்பட்டு, துரூர் கிராமங்களுக்கு செல்லும் தார் சாலை, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. இந்த சாலை பராமரிப்பு இல்லாததால், குண்டும் குழியுமாகி சேதமடைந்துள்ளது. தற்போது பெய்த மழையால், சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் இரு சக்கர வாகனங்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றன.
இந்த சாலையை சீரமைக்கக் கோரி ஊர்மக்கள் சார்பில், கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோரிடம பலமுறை முறையிட்டு, மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி, சேதமடைந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.