கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் நுண்கதிர் பரிசோதனை வாகனத்தை டி. ஆர்.ஓ., சத்தியநாராயணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த வாகனம் மூலம், மேலூர், கச்சிராயபாளையம், கரியாலூர், புதுப்பேட்டை, ரிஷிவந்தியம், தியாகதுருகம், ஜி. அரியூர், எலவனாசூர்கோட்டை, திருநாவலூர் ஆகிய அலகுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் காசநோய் முகாம் நடத்தப்படுகிறது.இதில் காசநோய்க்கான சளி மாதிரிகள் எடுப்பது, தேவைப்படுவோருக்கு நுண்கதிர் பரிசோதனை செய்வது உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.
நிகழ்ச்சியில், அரச மருத்துவக் கல்லூரி முதல்வர் பவானி, காசநோய் ஒழிப்பு திட்ட இணை இயக்குனர் செந்தில், மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா, காசநோய் அலுவலர் மருத்துவர் சுதாகர், நுரையீரல் நிபுணர் ராம்குமார், காசநோய் மருத்துவர் பொய்யாமொழி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இலியாஸ்கான் உட்பட பலர் பங்கேற்றனர்.