சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகி சூரியமூர்த்தி தலைமையில் திருப்பூரில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சங்கராபுரத்திலிருந்து 20 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். வயது அடிப்படையில் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு என இரண்டு பிரிவுகளில் நடத்தப்பட்டது.இதில் சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவர்கள் 8 பேர் தங்கப்பதக்கமும், 12 பேர் வெள்ளிப்பதக்கமும் பெற்று வெற்றி பெற்றனர். போட டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆசான் சூரியமூர்த்தி, சிலம்ப பயிற்சியாளர்கள் தமிழ்செல்வன், ராகுல்பரதன் ஆகியோர் வாழ்த்தினர்.