தச்சூர் ஆக்ஸாலிஸ் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு மழைக்கால பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் சுப்புராஜ் தலைமை தாங்கினார்.
உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், பாரதி பள்ளி நிர்வாக இயக்குநர் கந்தசாமி, ஆக்ஸாலிஸ் பள்ளி நிர்வாக இயக்குநர் பரத் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், வீட்டில் மின்சாதனங்களில் பழுது ஏற்பட்டால் அதை தாமாக சரிசெய்ய முயற்சிக்க கூடாது. ஈரமான கைகளுடன் மின்சாதன பொருட்களை தொடக்கூடாது.
மழைக்காலங்களில் மின்கம்பிகளுக்கு அருகே செல்ல கூடாது, ஈரமான மின்கம்பங்களை தொடக்கூடாது என மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் உதவி மின்பொறியாளர்கள் நவநீத கிருஷ்ணன், ரியாஸ் நஜிமுதீன், வினோத், இள மின்பொறியாளர்கள் அழகன் உட்பட பலர் பங்கேற்றனர். உதவி மின்பொறியாளர் தமிழரசன் நன்றி கூறினார்.