நெல்லை
மாவட்டம்நெல்லை
நெல்லை தொழிலதிபர் ஆர்எஸ் முருகன் அலுவலகத்தில் வருமான வரி சோதனை
நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தை சேர்ந்தவர் ஆர் எஸ் முருகன். மாநிலத்தின் பிரதான சாலை ஒப்பந்தக்காரர் மற்றும் தொழிலதிபர். பாளையங்கோட்டை என் ஜி ஓ காலனியில் இவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளது.
இன்று காலை 10 மணிக்கு நெல்லை வருமானவரித்துறை அலுவலர் மகாராஜன் தலைமையில் வந்த அலுவலர்கள் தொழிலதிபர் ஆர் எஸ் முருகன் வணிக நிறுவனத்தில் மாலை 5 மணி வரை ஆய்வு செய்தனர்.

ஒப்பந்த பணிகளைச் செய்யும் போது அதற்கான தொகையில் ஒரு சதவீதம் அட்வான்ஸ் டாக்ஸ் ஆக கட்ட வேண்டும். அவ்வாறு கட்டப்பட்டு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, முன்வரி செலுத்தாத தொகையை கணக்கிட்டு தொழிலதிபரிடம் அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நெல்லை மாநகர் பகுதியில் அனைவரும் வியக்கும் வகையில் ஆர் எஸ் முருகன் மகனுக்கு பிரம்மாண்டமான திருமண விழா நடந்தது. அதற்காக இருவது கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் வருமானவரித்துறை ஆய்வு நடத்தியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அரசுப் பேருந்துகளில் மட்டுமே அனுமதி – வனத்துறை அறிவிப்பு…!
திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு, இன்று (ஜூலை 23) முதல் பக்தர்கள் அரசுப் பேருந்துகளில் மட்டுமே செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆடி அமாவாசையையொட்டி ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், இந்தக் கட்டுப்பாட்டை வனத்துறை விதித்துள்ளதுடன், அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில், கானல் காடுகளுக்குள் அமைந்துள்ளதால், வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலை அச்சுறுத்தாமல் பக்தர்களின் வருகையை ஒழுங்குபடுத்த வேண்டிய…
-
காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்ற 8 பேருக்கு ரூ 60,000 அபராதம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்த மாட்டுபாதைபிரிவு ராமபட்டிணம்புதுார் செல்லும் சாலையில்ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் ரோந்து சென்றபோது அங்குள்ள பட்டா நிலங்களில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி(61), கார்த்திக்(34), துர்க்கைவேந்தன்(33), ஐயப்பன்(34), அபினேஷ்(24), மகுடீஸ்வரன்(35), வீரபாண்டி(25), குமரேசன்(37) ஆகிய 8 பேரை பிடித்து அவர்களுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர்
-
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பழைய ஆயக்குடியை சேர்ந்த ரமணிபாஸ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து 6 பவுன் தங்க நகையை மர்ம நபர் கொள்ளையடித்தது தொடர்பாக ஆயக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் பழனி DSP.தனஞ்செயன் மேற்பார்வையில் ஆயக்குடி காவல் நிலைய ஆய்வாளர் ஜோதிமுருகன் தலைமையிலான போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட போதைராஜா என்பவரை…