கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர். கே. எஸ். கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் நிர்வாக குழு தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர் டாக்டர் குமார், செயலாளர் கோவிந்தராஜூ, துணைத்தலைவர்கள் திருஞானசம்பந்தம், ரவிசங்கர், கல்லூரி ஆலோசகர் மதிவாணன் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு பங்கேற்று, கல்லூரியின் வெள்ளி விழா முகப்பு நுழைவு வாயில் மற்றும் விளையாட்டு மைதானத்தின் அரங்க நுழைவு வாயிலை திறந்து வைத்து பேசும் போது, “ஆசிரியர் பணியே தவப்பணி, கட ைசி இருக்கையில் உள்ள மாணவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் இன்முகத்துடன் பாடம் நடத்த வேண்டும், தவறு செய்யும் மாணவர்களை தனியாக அழைத்து அறிவுரை கூற வேண்டும். சிறப்பிடம் பெற்ற மாணவர்களை அனைவரது முன்னிலையிலும் பாராட்ட வேண்டும், ஆசிரியர்கள் அனைத்து புத்தகங்களையும் படிக்க வேண்டும்” என பேசினார்.