கடலூர் மாநகராட்சி 34 வது வார்டு மனவெளி கிராமத்தைச் சேர்ந்த சின்ராஜ் கடந்த ஐந்தாம் தேதி முதல் அவரை காணவில்லை என்றும் விசாரித்ததில் அவர் சோரியங்குப்பம் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்று பாலத்தில் இருந்து விழுந்து ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார் என்றும் சின்ராஜ் மனைவி மற்றும் பிள்ளைகள் நேற்று கடலூர் மாநகராட்சித் துணை மேயர் பா. தாமரைச்செல்வன் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு கொடுத்தனர்.
முன்னதாக பாகூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. கடலூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக சின்ராஜ் உடலை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் இவரங்கள் குடும்பத்திற்கு தகுந்த நிவாரணம் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்