கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்தவர் நித்தியா (24) க/பெ அன்பழகன். இருவருக்கும் திருமணமாகி 6 1/2 வருடங்களாகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக 08.12.24 அன்று ஊரில் உள்ள அரசு பொது கிணற்றில் நித்தியா அவரது குழந்தைகள் அனிஷ் (வயது 5), கோபிகா (வயது 2) ஆகிய மூன்று பேரும் தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தகவல் அறிந்த பொதுமக்கள் உடனடியாக வேப்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின்பேரில் விரைந்து சென்ற போலிசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைககு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் அன்பழகனிடம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.