கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள விவசாய நிலங்களில் வாழை சாகுபடி செய்தனர்.
இந்த நிலையில் ஃபென்சல் புயல் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதற்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.