
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடக்குத்து இந்திராநகரில் வியட்நாம் உலக தமிழர் மாநாடு அழைப்பிதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.ஜனவரி தேதிகளில் வியட்நாம் டனாங் நகரில் நடைபெற உள்ள உலகத் தமிழ் மாநாட்டு அழைப்பிதழை மாநாட்டுக் குழுவின் தலைவர் சித்தர் திருத்தணிகாசலம் வெளியிட முதல் அழைப்பிதழை பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன் பெற்றுக் கொண்டார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.