கள்ளக்குறிச்சியில், ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் நிவாரண தொகை வழங்க வலியுறுத்தி தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் பெரியசாமி, பொருளாளர் பச்சமுத்து முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய செயலாளர் நல்லதம்பி வரவேற்றார். நகர செயலாளர் அஷ்ரப்அலி, ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், செந்தில்குமார், ஜெயசங்கர், இளையராஜா, கோதண்டபாணி, பழனிவேல், முருகன், மஞ்சுநாதன், அருள், திருமால், திருமுருகன், அய்யம்பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், பெஞ்சல் புயல் நிவாரணத்தை அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வழங்க வேண்டும், பயிர் சேதமடைந்த விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.