
திருவண்ணாமலை மாநகரில் தீப திருவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீப திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை மாநகரில் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இன்று காவல்துறை வாகனங்களின் அணிவகுப்பு திருவண்ணாமலை மாநகரில் உள்ள மாட வீதிகளின் வழியாகவும் முக்கிய வீதிகளின் வழியாகவும் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து வாகன நெரிசல் ஏற்பட்டது.