கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலைய விரிவாக்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சேவாக் சோ வயது 55 இவர் வழக்கம் போல் நேற்று பணிக்கு சென்றார்.
அனல் மின் நிலையத்தில் 20 அடி மேல் பகுதியில் இருந்து கீழே விழுந்ததில் இரும்பு கம்பி ஒன்று வட மாநில தொழிலாளியின் தலையில் ஏறி விபத்துக்குள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் நெய்வேலி என்எல்சி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து நெய்வேலி தெர்மல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.