கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 12. 28 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
கமிட்டிக்கு, மக்காச்சோளம் 420 மூட்டை, கம்பு 25, வேர்க்கடலை 25, எள் 3 மூட்டை என 473 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை மக்காச்சோளம் 2, 232 ரூபாய்க்கும், கம்பு 3, 027, வேர்க்கடலை 9, 820, எள் 10, 558 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக 12 லட்சத்து 28 ஆயிரம் 343 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 170 மூட்டை விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2, 166 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 3 லட்சத்து 83 ஆயிரத்து 260க்கு வர்த்தகம் நடந்தது.
தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் நெல் 48 மூட்டை, கம்பு 3 மூட்டை என 51 மூட்டை விளைபொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. சராசரியாக நெல் 1, 463 ரூபாய்க்கும், கம்பு 2, 770 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 581க்கு வர்த்தகம் நடந்தது.