தச்சூர் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டு மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டு பதிவு இயந்திரங்கள் மாதம் தோறும் ஒரு முறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி கலெக்டர் பிரசாந்த் நேற்று சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஆய்வு செய்தார். தேர்தல் தாசில்தார் மாரியாப்பிள்ள, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.