சங்கராபுரம் அடுத்த பாண்டலம் முத்தமிழ் அரங்கத்தில் நடந்த விழாவிற்கு சங்க காப்பாளர் கோமுகி மணியன் தலைமை தாங்கினார். செயலாளர் பழனிவேல், பொருளாளர் அம்பேத்கர், துணைத் தலைவர் வளர்மதிச் செல்வி, ஊராட்சி தலைவர் பாப்பாத்தி நடராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் முருக்குமார் வரவேற்றார்.
விழாவில் திருக்குறள் ஒப்புவித்தல், கவிதை, பேச்சு, ஓவியம், இசைப்பாடல், பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு ஓய்வு பெற்ற கலால் உதவி ஆணையர் சண்முகசுந்தரம் பரிசு வழங்கினார்.
விழாவில், தமிழ் படைப்பாளர் சங்கத் தலைவர் நெடுஞ்செழியன், சங்கை தமிழ்ச் சங்க தலைவர் சுப்ராயன், திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி, கல்லை தமிழ் சங்க செயலாளர் மதிவாணன் உட்பட பலர் பங்கேற்றனர்.