கிடைஆடு, கிடைமாடு வனமேய்ச்சல் உரிமையை தடுக்கும் வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பு தலைவர் ராஜிவ்காந்தி தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க தலைவர் கஜேந்திரன், இளைஞரணி செயலாளர் முருகானந்தம், ஆடுவளர்ப்போர் நலச்சங்க தலைவர் முனியசாமி, பல்வேறு சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், செம்பியன்மாதேவி கிராமத்தில் கிடை மாடு வளர்க்கும் மக்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி மாட்டு சாணத்தை அபகரித்த வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிடை ஆடு மற்றும் மாடு மேய்ச்சல்காரர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்.மேய்ச்சல் சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.