திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் வருவாய்க் கோட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பட்டா கோரி, பட்டா மாற்றம், கணினி திருத்தம், ஆக்கிரமிப்பு, நிலஅளவை, யு. டி. ஆர். திருத்தம், வரைபட திருத்தம், மகளிர் உரிமைத்தொகை, ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, கல்வி உதவித் தொகை, கிராம உதவியாளர் மீது புகார், இறப்புச் சான்று, வெள்ள நிவாரணம், குடும்ப நல உதவித் தொகை, சாலை சீரமைத்தல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 56 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வருவாய் கோட்ட அலுவலர் உத்தரவிட்டார்.