கடலூர் மாநகராட்சி மணவெளியை சேர்ந்த சின்ராஜ் கடந்த ஐந்தாம் தேதி தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அவரது உடலை நேற்று (டிசம்பர் 17) தான் சுப்பூப்பலவாடி அருகே தீயணைப்புத் துறையினர் கண்டுபிடித்தனர்.
தற்போது சின்ராஜ் குடும்பத்திற்கு கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி வழங்கினார். உடன் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் கடலூர் மாணவர் மாவட்ட செயலாளர் செந்தில் மற்றும் மணவெளி குணசேகரன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் உள்ளனர்.