கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கொசுக்கள் மூலம் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. இது மட்டுமில்லாமல் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.