ஃபெஞ்சல் புயல் ம்ம் தென்பெண்ணையாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் உச்சிமேடு, சுபஉப்பலவாடி, நாணமேடு, கண்டக்காடு, தாழங்குடா ஆகிய 5 கிராம மக்கள் நேற்று முன்தினம் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் கடலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது பற்றி கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா அளித்த புகாரின் பேரில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்ததாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன் உள்பட 200 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.