
பெஞ்ஜல் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கானூர், பேரூர், காவாலக்குடி, முடிகண்டநல்லூர், மழவராயநல்லூர், குமாரகுடி, நந்தீஸ்வரமங்கலம், வட்டத்தூர் உள்ளிட்ட சுமார் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் சாகுபடி செய்து, பராமரித்து வந்த நெல், மணிலா, மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன. எனவே புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஸ்ரீமுஷ்ணம் பகுதி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.