
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வடலூர் நகராட்சி உட்பட்ட பகுதிகள் முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை வடலூர் நகரமன்ற தலைவர் சிவக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.