இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மாநில அளவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.கலெக்டர் பிரசாந்த்செய்திக்குறிப்பு:இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மாநில அளவில் விருதுகள் வழங்கப்படுகிறது.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர்களை சிறப்பாக விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு சான்றிதழுடன் ஊக்கத்தொகையாக முதல் பரிசு ஒரு லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசு 60 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசு 40 ஆயிரம் ரூபாய வழங்கப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தோட்டக்கலைத் துறையின் இணைய தளத்தில் (www.tnhorticulture.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் விண்ணப்பங்களை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் வரும் 26ம் தேதிக்குள் சமர்ப்பித்து பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.