கள்ளக்குறிச்சியில், மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க ஆண்டு விழா, மாவட்ட மற்றும் மாநில புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு, சங்க தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர்கள் தட்சணாமூர்த்தி, செங்குட்டுவன், இணைச் செயலாளர்கள் வெங்கடேசன், வேல்முருகன் முன்னிலை வகித்தனர். செயலாளர் மதியழகன் வரவேற்றார். பொருளாளர் முத்துகருப்பன் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி, சேவையே இன்பம் தலைப்பில் பேசினார்.
மாநில சங்க புதிய நிர்வாகிகள் பொதுச் செயலாளர் செல்வன், மாநில பொருளாளர் அன்பழகன், அமைப்பு செயலாளர் கோவிந்தராஜ் சிறப்புரையாற்றினர். கள்ளக்குறிச்சி அனைத்து வணிகர் சங்க தலைவர் செல்வகுமார், அமைப்பு செயலாளர் ராஜேந்திரன், மொத்த மருந்து வணிகர் பிரிவு செல்வராஜ், மருந்து வணிகர் பிரிவு சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில் ஆன்லைன் மூலம் மருந்து வியாபாரத்தால் பொதுமக்கள், இளைஞர்கள் பாதிப்புக்குள்ளாவதால் தடை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டது.