கள்ளக்குறிச்சியில் ஆற்காடு லுத்தரன் திருச்சபை பெதஸ்தா ஆலய நூற்றாண்டு நிறைவு விழா நடந்தது. கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலையில் கடந்த 1923ல் ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் பெதஸ்தா ஆலயம் கட்டப்பட்டது.
இதன் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. பேராயர் பீட்டர்பால் தாமஸ் தலைமை தாங்கினார். எட்டாம் பேராயர் சாமுவேல் கென்னடி முன்னிலை வகித்தார். டேனிஷ்மிஷன் பள்ளியிலிருந்து திருச்சபை மக்களோடு பேராயர் பீட்டர்பால் தாமஸ் ஊர்வலமாக சென்று, ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு நிறைவு கல்வெட்டை திறந்து வைத்தார்.
விழா மலரை பேராயர் பீட்டர்பால் தாமஸ் வெளியிட, ஆற்காடதிருச்சபை முன்னாள் செயலாளர் ஏசடையான் பெற்றுக் கொண்டார்.இதில், திருச்சபையின் செயலாளர் ஹூபர்ட் தனசுந்தரம், மத்திய நிர்வாகி தெய்வநீதி, ஆளுங்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.