திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் வழிபாட்டு உரிமைச் சட்டம் 1991-மீறும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாவட்ட தலைவர் யாசர் அராபத் அவர்களின் தலைமையில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வந்தவாசி நகர செயலாளர் இனியவன், நகர துணை செயலாளர்கள் இருதயராஜ், ஜபருல்லா வந்தவாசி மைய ஒன்றிய செயலாளர் ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.