திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த களம்பூர் அருகேயுள்ள பாலம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேதமடைந்த வகுப்பறை கட்டடங்களை சீரமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தப் பள்ளியில் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 மாணவர், மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு, வகுப்பறை கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. மேலும், ஒரு வகுப்பறை மட்டுமே நல்ல முறையில் இருப்பதால் 60 மாணவர்களும் ஒரே வகுப்பில் அமர வைக்கும் நிலை உள்ளது.
மேலும், மரத்தடியிலும் வகுப புகள் நடத்தும் நிலை உள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு வேட்டைக்காரர் பழங்குடி சமுதாய மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால், தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இந்தப் பள்ளியில் சேதமடைந்த வகுப்பறை கட்டடங்களை சீரமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.