தமிழ்நாடு மைக் செட் நண்பர்கள் நலச்சங்கம், ஒளி, ஒலி மேடை பந்தல் அமைப்பாளர் சங்கம் மற்றும் ஆரணி வட்டார ஒலி – ஒளி மேடை அலங்காரம் மற்றும் சப்ளையர்ஸ், பந்தல் அமைப்பாளர்கள் நலச்சங்கம் இணைந்து ஆரணி நகரில் நடத்திய மாபெரும் மாநில மாநாட்டை கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கு. பிச்சாண்டி துவக்கி வைத்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், ஆரணி தொகுதி பொறுப்பாளர் அன்பழகன், ஆரணி நகர மன்ற தலைவர் மணி, ஆரணி ஒன்றிய குழு பெருந்தலைவர் சுந்தர், ஒன்றிய கழகச் செயலாளர் துரை மாமது, மேற்கு ஆரணி ஒன்றிய குழு பெருந்தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.