இதற்காக மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகர் மாநாடு நடைபெறும் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாநாட்டுக்கான பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து உழவர் பேரியக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், தமிழகம் முழுவதும் இருந்து உழவர்கள் வந்து, செல்ல போக்குவரத்து வசதி மற்றும் வாகனங்கள் நிறுத்தும் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பது குறித்து திருவண்ணாமலை நகர உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார், திருவண்ணாமலை மேற்கு காவல் ஆய்வாளர் சு. அன்பரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆய்வின்போது, தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநிலத் தலைவர் கோ. ஆலயமணி, செயலர் வேலுசாமி, பாமக மாநில இளைஞர் சங்கத்தின் செயலர் ச. வடிவேலன், தி. மலை தெற்கு மாவட்ட பாமக செயலர் ஏந்தல் பெ. பக்தவச்சலம், மேற்கு மாவட்ட பாமக செயலர் இல. பாண்டியன், உழவர் பேரியக்க மாவட்டச் செயலர் கோ. சிவக்குமார், மாவட்டத் தலைவர் அக்னி ஆறுமுகம், திருவண்ணாமலை நகரத் தலைவர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்த