கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை வெள்ளி விழாவாகக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட மையநூலகத்தில் வரும் டிச. 23-ஆம் தேதி முதல் டிச. 31-ஆம் தேதி வரை திருவள்ளுவர் புகைப்படங்களைக் காட்சிப்படுத்துதல், திருக்குறளின் பெருமையை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், திருவள்ளுவர் புகைப்படத்துக்கு மாலை அணிவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
மேலும், நூலகத்தின் வாசகர் வட்டம் சார்பில், பள்ளி மாணவர், மாணவிகளுக்கும் நூலக வாசகர்களுக்கும் திருக்குறள் கருத்தரங்கம், விநாடி விளக்கம், வினாப்போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக தலா ரூ. 5 ஆயிரம், 2-ஆம் பரிசாக தலா ரூ. 3 ஆயிரம், 3-ஆம் பரிசாக தலா ரூ.2 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும். பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும். போட்டிகளில் கலந்துகொள்ள விரும்புவோர் டிச. 21-ஆம் தேதிக்குள் மாவட்ட மையநூலகத்தை அணுகி போட்டிகளில் பங்கேற்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.