திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமையன்று சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்று வருகின்றது.இதில் காவல் துறை மூலம் தீர்க்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் இன்று நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்று விசாரணை நடத்தினார்.
பின்னர் அதனை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் தொடர் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு) R. சௌந்தரராஜன் உடன் இருந்தார்.